Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

சிறைச்சாலை அதிகாரிகளின் தகவல்களை இரகசியமாகச் சேகரித்து வந்த நபர் கைது!

சிறைச்சாலை அதிகாரிகளின் தகவல்களை இரகசியமாகச் சேகரித்து வந்த நபர் கைது!

சிறைச்சாலை அதிகாரிகளின் தகவல்களை இரகசியமாகச் சேகரித்து வந்த நபர் ஒருவரை சகஸ்புர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர் அண்மையில் புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றத்தின் போது உயிரிழந்த மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்பவரின் நெருங்கிய தொடர்பை பேணியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் அஸ்மான் என்பவரால் கடந்த ஆண்டு தெஹிவளை வட்ரப்பல வீதியில் நடத்தப்பட்ட இரட்டைக்கொலை சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் என்றும் தெரியவந்துள்ளது.

புதிய மெகசின் சிறைச்சாலையில் பதற்றம் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.

மேலும் இவர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ‘கொஸ் மல்லி’ என்ற குற்றவாளியின் நெருங்கிய சகா என்பதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் கைபேசியைப் பரிசோதித்த போது, ‘கொஸ் மல்லி’ என்பவருடன் நடத்திய பல உரையாடல்களின் குரல் பதிவுகளைப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த தொலைபேசி உரையாடல்களில், சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில் திரட்டப்பட்ட தகவல்கள் உள்ளடங்கியிருந்ததுடன், அவர்களுக்கு ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பகிர்க: Facebook Twitter