Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

வீடு கட்டித் தருவதாகக் கூறி சமூக வலைத்தளங்கள் ஊடாக பெருந்தொகை பணத்தை மோசடி செய்த நபர் கைது!

வீடு கட்டித் தருவதாகக் கூறி சமூக வலைத்தளங்கள் ஊடாக பெருந்தொகை பணத்தை மோசடி செய்த நபர் கைது!

வீடு கட்டித் தருவதாகக் கூறி சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு நபர்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்த நபரொருவர் மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சமூக வலைத்தளங்கள் மூலம் வீடுகளைக் கட்டித் தருவதாகக் கூறி, வீடுகளுக்கான பணத்தை தவணை முறையில் செலுத்த முடியும் எனத் தெரிவித்து இந்த மோசடியை செய்துள்ளார் என்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் மோசடி செய்த தொகை இரண்டுரை கோடி ரூபாய்க்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவருக்கு எதிராக 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

பகிர்க: Facebook Twitter