Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்து- தாயும், மகனும் உயிரிழப்பு!

பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்து- தாயும், மகனும் உயிரிழப்பு!

பகமூண, தமன பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

63 வயதுடைய பெண்ணொருவரும் அவரது 43 வயதுடைய மகனும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் சாரதியும் பின்னால் பயணித்த பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த 09 வயதுடைய ஆண் குழந்தையொன்று காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நாளை (11) ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பகிர்க: Facebook Twitter