சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீண்டகாலமாக காரில் மாடுகளைத் திருடி இறைச்சியாக விற்பனை செய்துவந்த கும்பலைச் சேர்ந்த இருவரைக் கைது செய்வதற்காகச் சம்மாந்துறை பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று (10) முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, மாடுகளைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அதிலிருந்த மாடுகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டன.
சுற்றிவளைப்பின்போது இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
எனினும் தப்பியோடிய சந்தேகநபர்கள் இருவரினதும் அடையாளங்களை பொலிஸார் கண்டறிந்துள்ளதுடன், அவர்களை விரைவாகக் கைது செய்வதற்கான தீவிரத் தேடுதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.