Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழப்பு- மருமகன் செய்த செயல்!!

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழப்பு- மருமகன் செய்த செயல்!!

லக்கல, தோரபிட்டிய பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மா ஓயா, கிராமம் 01 பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இறந்தவருக்கும் அவரது மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால், மருமகன் இந்தத் தாக்குதலை நடத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்த நிலையில், அவரை வைத்தியசாலையில் சேர்க்க பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.

சந்தேகநபரான மருமகன் அப்பகுதியை விட்டுத் தப்பியோடியுள்ள நிலையில், அவரைக் கைது செய்ய லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter