Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட பெருந்தொகையான மதுபானப் போத்தல்களுடன் நபரொருவர் கைது!!

அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட பெருந்தொகையான மதுபானப் போத்தல்களுடன் நபரொருவர் கைது!!

அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட பெருந்தொகையான மதுபானப் போத்தல்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அறுகம்பை முகாமின் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த நபர் நேற்று (10) இரவு கைது செய்யப்பட்டார்.

கைதான நபரிடம் இருந்து 4,20,000 ரூபா பெறுமதியான 408 பியர் கேன்களும் பல்வேறு வகையான 36 மதுபானப் போத்தல்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தற்போது அறுகம்பை சுற்றுலா வலயத்திற்கு அதிகளவிலான வெளிநாட்டவர்கள் வருகை தருவதால், அங்கு சிறிய அளவிலான விடுதிகளை நடாத்திச் செல்லும் சிலர் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களைக் கொண்டுவந்து வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட மதுபானப் பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பகிர்க: Facebook Twitter