கஞ்சா கடத்திய இளம் ஜோடியை ஆரச்சிகட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ராஜாங்கனை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 26 வயதுடைய ஆண் ஒருவரும் 22 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான நபர்களிடம் இருந்து சுமார் 17 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கஞ்சா செடிகள் தனமல்வில பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்டவை என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.