யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர் அகால மரணம் அடைந்துள்ளார்.
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (06) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
குறித்த மாணவி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்தார்.
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இம்மாணவி கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் அனைவர் மத்தியிலும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.