Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேல் மாகாணக் கிளை நாளை ஆரம்பம்!

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேல் மாகாணக் கிளை நாளை ஆரம்பம்!

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேல் மாகாணக் கிளை நாளை (09) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் அதிகளவிலான எரிபொருள் விநியோகஸ்தர்கள் மேல் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், இந்த கிளையை விரைவாக நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இதுவரை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து நியாயமான தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை என்றும், அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இச்சங்கம் தொடங்கப்படுவதாகவும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குருணாகல் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைத் தவிர, ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே இச்சங்கத்தின் பிராந்தியக் கிளைகள் நிறுவப்பட்டுள்ளன.

எனினும் எதிர்காலத்தில் அந்த இரு மாவட்டங்களையும் மையமாகக் கொண்டு கிளைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter