Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

பாடசாலை மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி- திருகோணமலையில் சம்பவம்!

பாடசாலை மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி- திருகோணமலையில் சம்பவம்!

திருகோணமலை திவுல்வெவ மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் சிகிச்சைக்காக மஹதிவுல்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் மூன்று மாணவிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பாடசாலைக் கட்டடத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்தமையினால் மாணவர்கள் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter