மாவத்தகமையிலிருந்து அஹஸ்யானாபிட்டிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 17 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் மாவத்தகம, அஹஸ்யானாபிட்டிய வீதியின் சமூக மண்டபத்தின் முன்னால் நேற்று (04) மதியம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞனும், பின்னால் அமர்ந்து பயணித்தவரும் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.