லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு உள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்தார்.
61 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை 10.00 மணிளவில் இடம்பெற்றுள்ளது.
குளவி கொட்டுக்கு உள்ளாகியதில் காயமடைந்த 5 பேர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏனையவர்களில் பலத்த காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.