Thursday, 30 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

ஈரான் மீது சக்தி வாய்ந்த தாக்குதல்களைத் தொடங்கியுள்ள அமெரிக்கா!

ஈரான் மீது சக்தி வாய்ந்த தாக்குதல்களைத் தொடங்கியுள்ள அமெரிக்கா!

ஈரான் மீது சக்தி வாய்ந்த தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதில் வழங்கும் வகையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கப்பல்கள் மீது செவ்வாய்க்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் ஈராக்கில் உள்ள ஈரானிய ஆதரவுப் படைகளை இலக்காகக் கொண்டு, முதல் முறையாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட அமெரிக்க – சவூதி கூட்டுத் தாக்குதல்களின் பின்னர் மோதல் மேலும் விரிவடைந்துள்ளது.

பெப்ரவரியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கியபோது, இந்த போர் சில வாரங்கள் மட்டுமே நீடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

ஆனால் மாதங்களாக இந்தப் போர் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter