Thursday, 30 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

சுகீஸ்வர பண்டாரவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

குறித்த வழக்கு தொடர்பில் சுகீஸ்வர பண்டார கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30) ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter