சந்தையில் உள்ள நுகர்வோர் பொருட்களின் தரத்தையும் தரநிலையையும் பரிசோதிக்கும் விசேட திட்டமொன்று இன்று (28) நடைமுறைப்படுத்தப்படுவதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.
தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு இந்த திட்டம் புறக்கோட்டை பொதுச் சந்தை வளாகத்தை மையமாகக் கொண்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவிக்கையில்,
முக்கியமாக உணவுப் பொருட்கள், அதேபோல் மின்னணுப் பொருட்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் என அனைத்திலும் தரநிலை பேணப்படுகிறதா எனப் பார்ப்பதே இதில் முதன்மையாகச் செய்யப்படுகிறது.
அங்கு உணவில் நச்சுத் தன்மை உள்ளதா என்றும், ஏனைய பொருட்களின் தரம் சரியாக உள்ளதா என்றும் பரிசோதிப்பதற்காக எமது அமைச்சின் கீழ் உள்ள SLS நிறுவனம், ITI நிறுவனம் உட்பட எமக்குரிய அனைத்து நிறுவனங்களுடனும் நாங்கள் புறக்கோட்டைக்குச் செல்கிறோம்.
புறக்கோட்டைக்குச் சென்று அங்குள்ள நிலைமை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை வழங்குவோம். அத்துடன் வியாபாரம் செய்வோரையும், அது தொடர்பான தொழில் முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வூட்ட நாங்கள் எதிர்பார்க்கிறோம்- என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.