நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 83,000 ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்றையதினம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,838 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் 27,464 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தற்போது கம்பஹா மாவட்டத்தில் 21.25% சதவீதமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் .
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 16,457 டெங்கு நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 5,685 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இன்றைய தின நிலவரப்படி 61 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இது சதவீத அடிப்படையில் 0.07% ஆகும்.