ஈரானுடன் சுமுகமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சாதகமான வாய்ப்பு உள்ளதாகவும் மெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஈரான் குறிப்பிடுகையில், அமெரிக்காவுடன் தாங்கள் எவ்வித நேரடிப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றைய தினமும் (27) ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே எந்தவொரு மோதல்களும் இடம்பெறவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தத் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், ஈரானும் தற்போது தனது தாக்குதல்களை நிறுத்தியுள்ளது.