Monday, 27 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

மேல் மாகாணத்தில் இடம்பெற்ற குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கைது!

மேல் மாகாணத்தில் இடம்பெற்ற குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கைது!

மேல் மாகாணத்தில் இடம்பெற்ற குற்றச்சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் ஒருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்கந்த பகுதியில் வைத்து நேற்று (26) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 19ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயானத்தில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர், நபர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றிருந்தனர்.

இதுதவிர கல்கிசை பொலிஸ் பிரிவில் நபர் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தித் தாக்கிய சம்பவமும் அண்மையில் பதிவாகியிருந்தது.

இந்த இரு குற்றச் செயல்களுக்கும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் அத்திட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபரிடமிருந்து 7 கிராம் 200 மில்லிகிராம் எடையுடைய ‘ஐஸ்’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், இந்தக் குற்றச் செயல்கள் அனைத்தும் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரால் நெறிப்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 கைத்தொலைபேசிகள் மற்றும் இக்குற்றங்களைப் புரிவதற்காக குறித்த வெளிநாட்டு நபரால் சந்தேகநபருக்கு வழங்கப்பட்டிருந்த 2 இலட்சம் ரூபாய் பணத்தில் எஞ்சியிருந்த 55,000 ரூபாவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter