Thursday, 23 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

2022ஆம் ஆண்டு ‘ அரகலய’ போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில், சமூக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார என்ற இளைஞரைக் கைது செய்து தடுத்து வைத்தமையின் ஊடாக, அக்காலப்பகுதியில் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோன் மற்றும் கொழும்பு வடக்கு விசேட விசாரணைப் பிரிவின் அப்போதைய பொறுப்பதிகாரி நளின் ஸ்ரீயந்த ஆகியோர் அவரது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அநுருத்த பண்டார என்ற குறித்த இளைஞனால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை விசாரணை செய்ததன் பின்னரே,உயர் நீதிமன்றம் இன்று (23) இந்த தீர்ப்பை வௌியிட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter