Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

வினாத்தாள் அச்சிடலில் ஏற்பட்ட தாமதம்- தென் மாகாண 2ஆம் தவணைப் பரீட்சையின் இன்றைய பாடம் ஒத்திவைப்பு!

வினாத்தாள் அச்சிடலில் ஏற்பட்ட தாமதம்- தென் மாகாண 2ஆம் தவணைப் பரீட்சையின் இன்றைய பாடம் ஒத்திவைப்பு!

தென் மாகாணப் பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சைக்கு அமைவாக இன்று (22) நடைபெறவிருந்த தரம் 9 இற்கான புவியியல் மற்றும் குடியியல் கல்வி வினாத்தாள் பரீட்சையை நடத்தாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் அச்சிடலில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இதுவரையில் வினாத்தாள்கள் கோட்ட அலுவலகங்களுக்கு அனுப்பப்படாததால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே இன்றைக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த பாடம் எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி நடைபெறும் என தென் மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் வலயத்தின் அனைத்து அதிபர்களுக்கும் அறியத்தரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்க: Facebook Twitter