ஆரம்பப் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்திக்கான திட்டங்கள் இன்று (14) முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
‘மலரும் சிறுவர் உலகிற்கு – சூரிய கதிராகும் மகிழ்ச்சியான குடும்பம்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இன்று முதல் 20ஆம் திகதி வரை இந்த தேசிய வாரம் செயல்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உடல், உள-சமூக மற்றும் அறிவுசார் வளர்ச்சி கொண்ட இலங்கை ஆரம்பப் பிள்ளைப்பருவ சந்ததியினரை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆரம்பப் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி குறித்து அறிவுள்ள ஒரு சமூகத்தை உருவாக்குவதும், அது தொடர்பான தரமான சேவைகளைப் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு விளக்குவதும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.