Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்- உயிரிழந்த அதிகாரிகளுக்காக 20 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குவது குறித்து கவனம்!

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்- உயிரிழந்த அதிகாரிகளுக்காக 20 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குவது குறித்து கவனம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் என்பது ஆரம்பக் கட்டக் கொடுப்பனவு மட்டுமே என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

வழங்கப்பட்ட இந்தத் தொகை குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்குவதற்கு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன் உயிரிழந்தவர்களின் அனைத்து இறுதிக்கிரியைகளும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செலவிலேயே மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில் இந்த மோதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நட்டஈடு வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மோதலில் காயமடைந்த 7 அதிகாரிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter