Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

யாழ் பல்கலையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

யாழ் பல்கலையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

யாழ் பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு பேராசிரியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரிதப்படுத்த கோரி பல்கலை முன்றலில் இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

“பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம்” எனும் அமைப்பின் அழைப்பில் யாழ் பல்கலைக்கழக முன்றலில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவர் மாணவிகளை துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கினார்கள் எனும் குற்றச்சாட்டில், பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிற நிலையில், காலத்தை இழுத்தடிக்காது விசாரணைகளை துரிதப்படுத்த கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,
“பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை கேளுங்கள் – அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்’.
“பல்கலைக்கழகங்களில் பெண்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும்”
” குற்றத்தை மறைக்க சட்டத்தை ஆயுதமாக்காதே “
“கண்ணியத்தை இழந்து கல்வியை பெறும் இடமா யாழ் பல்கலைக்கழகம்”
“தமிழர் பண்பாட்டிற்கு உணர்ச்சி கொள்ளும் பல்கலைக்கழகமே பாலியல் சுரண்டல்களுக்கு மௌனம் ஏன் ? “

போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter