Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

கண்டி நகரில் மேலும் பல வீதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள திட்டம்- அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

கண்டி நகரில் மேலும் பல வீதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள திட்டம்- அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

மத்திய அதிவேக வீதியின் கட்டுமானப் பணிகளை கலகெதர பகுதியில் நிறைவு செய்வது, எதிர்காலத்தில் அந்த அதிவேக வீதியை கன்னொருவை வரை நீடிக்கும் திட்டத்துடன்தான் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய (09) நாடாளுமன்ற அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கண்டி நகரில் மேலும் பல வீதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன் சேதமடைந்த கொழும்பு – கண்டி மலையக பிரதான ரயில் பாதையின் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது 2027ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter