Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம்- நீதியமைச்சர் வெளியிட்ட தகவல்!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம்- நீதியமைச்சர் வெளியிட்ட தகவல்!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் போது, கைதிகள் ஆயுதங்களைப் பெற்றிருந்ததாகவும், அவர்கள் இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்ததாகவும் நீதியமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த மோதலை அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர், சிறைச்சாலை இயந்திரத்தைச் சீர்குலைப்பதே மோதலில் ஈடுபட்டவர்களின் நோக்கமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

தாக்குதலுக்கு உள்ளானது ஆயுதமற்ற இரு அதிகாரிகள் என்றும், அவர்களைக் காப்பாற்றுவதற்காகவே ஏனைய அதிகாரிகள் அந்த இடத்திற்குச் சென்றதாகவும், பெரும்பாலான அதிகாரிகள் செங்கற்கள் மற்றும் கம்புகளால் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எனினும் நடந்த தவறைப் புரிந்துகொண்டு மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், என்ன காரணத்திற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

பகிர்க: Facebook Twitter