டெங்கு அபாயம் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் நேற்று (06) முதல் இரண்டு வார காலத்திற்கு தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பல்கலைக்கழகத்தில் பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சில மாணவர்கள் அந்தப் பரீட்சைகளில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாகவே பல்கலைக்கழகத்தைத் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் மாணவர்களுக்கான விரிவுரைகள் இணையவழியில் தொடர்ந்தும் நடைபெறும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்ட மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.