எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரைட் ரைஸ், கொத்து, பரோட்டா மற்றும் சிற்றுண்டிகளின் விலைகள் குறைக்கப்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்திருந்தார்.
எனினும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவிக்கையில்,
எரிவாயு விலை சிறிய அளவில் குறைக்கப்பட்டதால் பேக்கரி உற்பத்திகளுக்கு எந்தப் பயனும் இல்லை எனவும், எனவே பாண் (Bread), பனிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை எவ்வகையிலும் குறைக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.