இணையம் ஊடாக வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி பண மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருவளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அப்பிடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் பேஸ்புக் மற்றும் டெலிகிராம் ஊடாகத் தொடர்புகளை ஏற்படுத்தி நாற்பத்து மூன்று இலட்சத்து எண்பத்தாறாயிரத்து இருநூற்று பத்தொன்பது (4,386,219) ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அந்தப் பணத்தில் 5 இலட்சம் ரூபாய் பணத்தை அவர் முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.