Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை ஹொரணை விசேட குற்றவியல் பிரிவினரால் நேற்று (26) காலை முன்னெடுக்கப்பட்டது.

கைதான பெண் 20 இலட்சம் ரூபாய் மோசடி செய்தமை தொடர்பில் ஹொரணை விசேட குற்றவியல் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கைது நடவடிக்கையும் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹொரணை விசேட குற்றவியல் பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter