Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

TIN தொடர்பாக பொதுமக்கள் தேவையற்ற பதற்றமடைய வேண்டாம்- யாழ்.அரச அதிபர்!

TIN தொடர்பாக பொதுமக்கள் தேவையற்ற பதற்றமடைய வேண்டாம்- யாழ்.அரச அதிபர்!

TIN தொடர்பாக பொதுமக்கள் தேவையற்ற பதற்றமடைய வேண்டாம் என யாழ்ப்பாண அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெறுவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையில் அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

TIN இலக்கத்தை ஜூன் 30ஆம் திகதிக்குள் கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்தக் காலக்கெடுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

TIN பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எந்தவித கட்டணமும் அறவிடுவதில்லை என்றும், இதற்காக பணம் பெறுவதோ அல்லது வழங்குவதோ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே TIN பதிவு செய்யப்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், இன்னும் பதிவு செய்யாதவர்கள் www.ird.gov.lk இணையத்தளம் மூலமாகவோ அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலமாகவோ பதிவு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிதாக பதிவு செய்பவர்களுக்கான TIN சான்றிதழ்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும், மேலதிக தகவல்களுக்கு 021 221 7333 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே TIN தொடர்பாக பொதுமக்கள் தேவையற்ற பதற்றம் அல்லது பீதியடைய வேண்டாம் என யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter