13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாதுகாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நாட்டின் உச்சக்கட்ட சட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதால் அது பாதுகாக்கப்பட வேண்டும். எனினும் அதனைப் பாதிக்கும் வகையில், சமகாலப் பட்டியலில் உள்ள சுற்றாடல் துறைக்கு மாகாண சபைக்கு இருக்கும் அதிகாரங்களில் தலையிடுவது பொருத்தமற்றது என தெரிவித்தார்.
இதற்குத் தீர்வுகாணக்கூடிய விரைவான வழிமுறை, மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதாகும் என்றும், இதன் மூலம் ஓர் அரசியல் அதிகாரம் தெரிவுசெய்யப்பட்டு மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
13ஆவது அரசியலமைப்பின் நிலைப்பாட்டில் இருக்கும் ஒரு தரப்பு என்ற ரீதியில், மாகாண சபைகளுக்கு தற்போதுள்ள உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தமை