யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி நடைபெற்று வரும் வருடாந்த பாதயாத்திரையில், கடந்த 33 நாட்களாக பக்தர்களுடன் இணைந்து பயணித்து வரும் “சுப்பிரமணியம்” என்ற நாய் தற்போது சமூக ஊடகங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாதயாத்திரீகர்களுடன் தொடர்ந்து பயணித்து வரும் இந்த நாயைக் காண வழிநெடுகிலும் மக்கள் திரண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நாய் தொடர்பில் பாதயாத்திரை குழு தலைவர் ஜெயாவேல் சாமி தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு முள்ளியவளை, தண்ணீரூற்று என்ற இடத்துக்கு நாங்கள் வருகை தந்திருந்த வேளையில், சுப்பிரமணியன் என்கிற நாய் தானாகவே வந்து எங்களுடன் இணைந்து கொண்டதாகத் தெரிவித்திருந்தார்.
அதற்கு முருகனின் நாமமான சுப்பிரமணியன் என்கிற நாமத்தை சூட்டி தங்களுடன் அழைத்து செல்வதாகத் தெரிவித்தார்.
மேலும் தங்களுடன் பயணித்த 33 நாட்களும் சைவ உணவை மட்டுமே உண்டு தங்களுடன் பயணிப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.