Wednesday, 24 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

கிராம உத்தியோகத்தர்கள் இன்று முதல் அனைத்து வகையான களப்பணிகளில் இருந்தும் விலகுவதற்கு தீர்மானம்!

கிராம உத்தியோகத்தர்கள் இன்று முதல் அனைத்து வகையான களப்பணிகளில் இருந்தும் விலகுவதற்கு தீர்மானம்!

கிராம உத்தியோகத்தர்கள் இன்று (24) முதல் அனைத்து வகையான களப்பணிகளில் இருந்தும் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல வருடங்களாக கிராம உத்தியோகத்தர்கள் கோரி வரும் பயணச் செலவுகளுக்கான போதிய எரிபொருள் கொடுப்பனவை வழங்குவது உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடில், எதிர்வரும் 30ஆம் திகதி சுகவீன விடுமுறையைப் பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிராம உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ கடமைகளை மேற்கொள்வதற்குத் தேவையான வசதிகள் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அதிகாரிகள் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என்றும் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter