அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்றின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று (24) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த இந்தப் பேருந்து, வெல்லம்பிட்டி அம்பகஹ சந்தி பகுதியில் வைத்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பேருந்தின் சாரதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.