ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனடா நாட்டு யுவதி ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
8 வயதுடைய கனடா நாட்டு யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது குறித்த யுவதி கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதான நபரிடம் இருந்து 352 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 36 கிலோகிராம் ஹஷீஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.