கிங் கங்கையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (23) மாலை இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை.
எனினும் இது ஒரு சந்தேகத்திற்கிடமான மரணம் என்பது இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணைக்குப் பின்னர், பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போத்தல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.