Tuesday, 23 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

கஜமுத்துக்களுடன் மூவர் கைது!

கஜமுத்துக்களுடன் மூவர் கைது!

கஜமுத்துக்களுடன் மூவர் அராவ கரந்தகஹமட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிபில, மாத்தளை மற்றும் பகமூன ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 49, 31 மற்றும் 29 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான நபர்களிடம் இருந்து 2 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்த 4 கஜமுத்துக்கள் கைப்பற்றப்பட்டன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஹாலிஎல, உடுவர முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, ஒற்றர் ஒருவரைப் பயன்படுத்தி நேற்று (22) இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அராவ கரந்தகஹமட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் அராவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

பகிர்க: Facebook Twitter