Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

யாழ். செம்மணி மனித புதைகுழி அகழ்வு- புதிதாக 11 எலும்புக்கூடுகள் அடையாளம்!

யாழ். செம்மணி மனித புதைகுழி அகழ்வு- புதிதாக 11 எலும்புக்கூடுகள் அடையாளம்!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் அகழ்வாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றையதினமும் புதிதாக 11 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 30ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் நடைபெற்றது.

இதன்போது ஏழு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 11 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படிருந்தன.

அதன்படி இதுவரையிலான அகழ்வு பணிகளில், 405 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன் அவற்றில் 377 எலும்புக்கூடுகள் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter