யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் நேற்றையதினம் (19) இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி பாரதி வீதி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சனுயன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பயிற்சிக்காக சென்றிருந்த குறித்த இளைஞர், பயிற்சி நிறைவடைந்த பின்னர் வாகனத்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்திசையில் வேகமாக பயணித்த மீன் ஏற்றிச் சென்ற வாகனம் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மீன் ஏற்றிச் சென்ற வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.