நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போயிருந்த இலங்கை மீனவர் ஒருவரது சடலம் இந்தியாவின் நாகபட்டினம் கடற்கரையோரத்தில் இன்று கரையொதுங்கியுள்ளது.
கடந்த 11ஆம் திகதி குறித்த மீனவர் நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.
இந்த மீனவர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளுடன் தேடுதல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையிலேயே இன்றையதினம் அவரது சடலம் தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையில் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
உரிய விசாரணைகளின் பின்னர் அவரது சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.