யாழ்ப்பாணம் – சின்னக்கடை சந்திப் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து இன்று (19) பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு , அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள் , சபை நாகரீகமின்றி செயற்படுதல் , கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அருச்சுனா இராமநாதன் செயற்பட்டு வருவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறான பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினமும் இடம்பெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் மிக மோசமான வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டு இருந்தமை தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று முற்பகல் 10 மணியளவில் பதாகை வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு தமது காரில் வந்த இராமநாதன் அர்ச்சுனா அதனை அங்கிருந்து அகற்றி தமது காரில் எடுத்துச் சென்றுள்ளார்.
