Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து- ஆசிரியை ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து- ஆசிரியை ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பூனாவை, கல்கந்தேகம வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிய 56 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று (18) காலை கண்டியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியை, பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூனாவை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter