Thursday, 23 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயற்சி- ஸ்கான் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் இரவில் அனுமதிக்கப்பட்ட 26 பயணிகள்!

இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயற்சி- ஸ்கான் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் இரவில் அனுமதிக்கப்பட்ட 26 பயணிகள்!

காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கப்பல் மூலம் செல்லவிருந்த 26 பயணிகள் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்துவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாகபட்டினம் – காங்கேசன்துறை இடையே இடம்பெறும் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையில் நேற்று (17) காலை நாகைபட்டினத்தில் இருந்து 117 பயணிகள் காங்கேசன்துறையை வந்தடைந்தனர்.

இவ்வாறு வந்த கப்பலில் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து 146 பயணிகள் நாகபட்டினம் நோக்கி பயணிக்க காத்திருந்தனர்.

இந்நிலையில் தங்கம் கடத்த முற்பட்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அவர்களில் 26 பயணிகள் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டனர்.

குறித்த 26 பேரையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

தடுக்கப்பட்டவர்களில் 17 இந்தியர்களும், 6 பெண்கள் உட்பட 9 இலங்கையரும் அடங்குகின்றனர்.

தடுத்து வைக்கப்பட்ட 26 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பரிந்துரைக்கப்பட்டபோதும் 17 பேரே யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டு ஸ்கானிங் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் நால்வர் தங்கத்தை விழுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 17 பேருக்கும் எஞ்சிய 9 பேருடன் இன்று மீண்டும் ஸ்கானிங் பரிசோதனை இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter