வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நபர் ஒருவரிடமிருந்து பல லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்தமை தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நபர் ஒருவரிடமிருந்து 4,990,000 ரூபாயை மோசடி செய்தமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளைத் தொடங்கியிருந்தனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையை அடுத்து, நேற்று (16) மதியம் இந்த குற்றச்சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை குடியுரிமை பெற்ற குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி கோட்ட விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.