Thursday, 23 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை- சந்தேகநபர்கள் கைது!

யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை- சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வரும் கும்பல் ஒன்று தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதான நபர்களிடம் இருந்து 5.2 கிராம் மற்றும் 5கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், அண்மையில் வேலணை பகுதியில் இடம்பெற்ற மாட்டு திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .

பகிர்க: Facebook Twitter