Thursday, 23 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

அமெரிக்கா – ஈரான் உடன்படிக்கை சாதகமாகினால் அதன் நன்மைகள் மக்களுக்கு கிடைக்கும்!

அமெரிக்கா – ஈரான் உடன்படிக்கை சாதகமாகினால் அதன் நன்மைகள் மக்களுக்கு கிடைக்கும்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான உடன்படிக்கை சாதகமாகினால் அதன் நன்மைகள் நிச்சயமாக மக்களுக்கு வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்கா – ஈரான் இடையிலான உடன்படிக்கை வரும் வெள்ளிக்கிழமைக்குள் உத்தியோகபூர்வமாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் உலகப் பொருளாதார நிலைமை சாதகமாக மாறும் போது, அதன் நன்மைகள் நிச்சயமாக மக்களுக்கு வழங்கப்படும்.

இந்த ஜூன் மாதத்துடன் முதற்கட்ட எரிபொருள் மானியக் காலம் முடிவடைகிறது. தற்போது மாதத்தின் நடுப்பகுதி என்பதால் உலகச் சந்தை மாற்றங்களை அவசரப்படாமல் உற்றுநோக்க வேண்டியுள்ளது. உலகச் சந்தையின் சாதகமான மாற்றங்களை மக்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்ப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

நாட்டின் பொருளாதாரச் செயற்பாடுகளை எவ்வித தடையுமின்றி சீராக முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமாயின், மக்களுக்கு இந்த எரிபொருள் நிவாரணங்களை வழங்குவது அவசியமாகும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter