யாழ். செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், நேற்றையதினம் புதிதாக 5 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டது.
இதன்போது இரு சிறுவர்கள் மற்றும் ஒரு கைக்குழந்தை உள்ளிட்ட 10 மனித என்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்படும் என்புக்கூடுகள் பல உடைந்த நிலையிலும், சீரற்ற முறையிலும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இப்பகுதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் மூலம், மொத்தமாக 360 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 351 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.