போதைக்கு அடிமையான இளம் குடும்பஸ்தர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கு ஏற்பட்ட கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மே மாதம் 28ஆம் திகதி அவசர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களால் விசேட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையிலேயே நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிறேம்குமார் மேற்கொண்டார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் அன்னாரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.