Friday, 24 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

வலி.வடக்கு பிரதேச மக்கள் தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி போராட்டம்!

வலி.வடக்கு பிரதேச மக்கள் தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் 36 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி இன்றைய தினம் (15) யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலி.வடக்கு பிரதேச மக்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் அப்பகுதி மக்கள் இன்னமும் மீள்குடியேற அனுமதிக்காது, அப்பகுதி மக்களின் காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.

இந்நிலையில் தமது காணிகளில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றி, தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் என யாழ். மாவட்ட செயலகம் முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

குறித்த போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.

பகிர்க: Facebook Twitter