Thursday, 23 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

முந்திரித் தோட்டம் ஒன்றில் நபர் ஒருவர் சுட்டுக் கொலை!

முந்திரித் தோட்டம் ஒன்றில் நபர் ஒருவர் சுட்டுக் கொலை!

வனாதவில்லுவ, கரதிவ் பகுதியில் உள்ள முந்திரித் தோட்டம் ஒன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு, சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கல்லடி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

உயிரிழந்த நபர் கரதிவ் பகுதியில் உள்ள பெருந்தோட்ட நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான முந்திரித் தோட்டத்தில் முந்திரி பறிக்கச் சென்றபோது, அங்குள்ள காவலாளிகளிடம் சிக்கியுள்ளார்.

இதன்போது அவர்கள் குறித்த நபரைத் தாக்கி, ஏர் ரைபிள் எனச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த 8 காவலாளிகள் 4 ஏர் ரைபிள் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட ஏத்தாலே, புத்தளம், கற்பிட்டி மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வனாதவில்லுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter